தனது கணவரை வைத்து 3 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக களமிறங்கிய ஐஸ்வர்யா அதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
பின்னர் அவர் மாரியப்பன் என்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரரின் வாழ்க்கை கதையை படமாக உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காலபோக்கில் அதுகுறித்த எந்த படப்பிடிப்பு அப்டேட்டுகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கொரோனோவால் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் பல யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கற்பித்தும் வந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது இரு கற்களை வைத்து அந்தரத்தில் அமர்ந்திருப்பது போன்ற சவாலான யோகா ஒன்றை செய்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.