அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இம்மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் .
எதிர்வரும் 28 ஆம் திகதியே இவர் இலங்கை வருகிறார் எனவும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சீனாவின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் இலங்கைவந்து திரும்பியுள்ள நிலையிலேயே, அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை கொழும்புக்கு அனுப்புகின்றது.