20ஆவது திருத்தத்தை சவால் செய்த மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் அலுவலகத்திற்கும், ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி சபையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனையை எதிர்த்து 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம், முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் இவ்வாறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனையானது வெறும் மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மையில் மட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுக்கள் மீதான விசாரணையின் இடையே நாடாளுமன்றத் தெரிவுக்குழு செயற்பாட்டின் போது, மேற்படி திருத்த யோசனையில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் எதிர்பாத்திருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உச்சநீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.