முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.
அவர் இதற்கு முன் கடந்த 5ம் திகதி விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்காக அவர் இன்று அழைக்கப்பட்டார்.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் 9.55 அளவில் ஆணைக்குழு முன் ஆஜராகினார்.