குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரி ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த இருவரும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது