நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் 2 நாட்களுக்குள் புதிய சட்டங்கள் அடங்கிய வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றத்தினால் முடியும் என்றும் மேற்படி நபர்களுக்கு 10 ஆயிரம் ருபாவுக்கு குறையாத அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் வழங்குவதங்கு நீதிமன்றத்தால் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்;
நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க வைரஸ் தொற்று நோய் பரவியுள்ள பிரதேசங்களாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்ட பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.