துறைமுகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மீண்டும் இராணுவத்தினர் மாத்திரமல்லாது, பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்துமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிற்குள் பரவி வரும் கொரோனா வைரஸ் நிலைமையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அதற்காக தயார்படுத்தும் நோக்கில், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேற்று கலந்துக்கொண்ட விசேட கூட்டத்தில் கருத்து வெளியிடும் போது நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் சுகாதார அமைச்சு வழங்கும் பரிந்துரைகள் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு சிரமங்கள் இல்லாத வகையில் கொரோனா ஒழிப்பை மேற்கொள்வதே எமது நோக்கம்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு என்ற வகையில், இளைஞர், யுவதிகள் பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விதம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்துள்ளது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.