கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு பொரளையில் உள்ள 6 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு கொரோனா நோயாளர்கள் வந்து சென்றதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இந்த வர்த்தக நிலையங்கள் கடந்த 3 தினங்களிற்குள் மூடப்பட்டுள்ள நிலையில், அவை தற்சமயம் தொற்று நீக்கலுக்கு உட்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.