கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
தற்போது கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் நலன் கருதி கடந்த சில நாட்களாக வர்த்தக நிலையங்களும் மருந்தகங்களும் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை பரிசீலித்த பின்னர், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் உயர்தர பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.