முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மெய்பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சொகுசு வாகனங்கள் இரண்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்டுள்ள குறித்த வாகனங்களிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்