பிரபல பாதாள உலகக் கோஷ்டி நபராக அறியப்பட்ட சுனில் பொன்சேகா இந்தியாவின் பெங்களூர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரால் தேடப்பட்டு வந்த சுனில் பொன்சேகா,
2003ஆம் ஆண்டில், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் சுமார் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தண்டனை அனுபவித்துவிட்டு வெளியேறியுள்ள அவர், தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி, இந்தியக் குடிமகனுக்கான ஆவணங்களையும் போலிக் கடவுச் சீட்டையும் பெற்றுள்ளார்
இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.