தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனை தேடி சி.ஐ.டியினர் வலைவிரித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக, ஆறு குழுக்களை அமைத்து, சி.ஐ.டியினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், ரிஷாத்தை கைது செய்வதை தடுக்கும் வகையில், அவருடைய சட்டத்தரணி, மேன்முறையீட்டு நீதிமன்றில், சற்றுமுன்னர் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலேயே இந்த ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்காக, சி.ஐ.டியினர் வலைவிரித்துள்ளனர். எனினும், மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள வீடுகளில் அவர் இருக்கவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக வலைவீசி தேடிவரும் சி.ஐ.டியினர், அவருடைய கணக்காளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை கைது செய்துள்ளனர்