ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 6பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி ப்ரமோத சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொலிஸ் அதிகாரிகளுடைய பீ.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர், கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் அவருடன் சேர்ந்து ஏனைய 5பொலிஸ் அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.