நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், இன்று (19) அதிகாலை தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி அவரை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தநிலையில் 6 நாட்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.