குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னரே, விளக்கமறியல் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இவர், நீதிமன்ற உத்தரவை மீறி, கடந்த 6 நாட்களாக, குற்றப்புலனாய்வு பிரிவினரின் கண்களுக்கு மண்ணை தூவி டிமிக்கி கொடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே தெஹிவளையிலுள்ள வீட்டில் வைத்து, இன்று காலை கைதுசெய்யப்பட்டார். அருக்கு அடைக்களம் கொடுத்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஏழுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனனர்.