கடத்தல்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷ் பலியாகியுள்ளார்.
மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு பகுதியிலேயே பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மாகந்துர மதுஷ் தொடர்பிலான சில துளிகள்
@ 2019.02.05 டுபாயில் கைது.
@ 2019.05.05 இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
@ CID தடுப்பில்.
@ 2020.10.16 CCD யிடம் ஒப்படைப்பு.
@ 2020.10.20 மறைத்து வைத்த போதைப்பொருளை காண்பிக்க அழைத்து செல்லப்படுகின்றார்.
@ கடத்தல்காரர்களின் துப்பாக்கி பிரயோகத்தில் மதுஷ் உயிரிழந்தார்.
@ சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் இருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.