நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு எதிரணியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளதாக கூறினார்.
இதன்போது, எழுந்துநின்ற நாடாளுமன் உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, அவ்வாறென்றால் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அவரை அழைத்து வருமாறு கோரினார்.
அதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் ரிஷாட் பதியுதீனுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, இது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார்.இந்த விடயம் சற்று நேரம் சபையில் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரேமலால் திஸாநாயக்கவுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தனவும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அப்படியாயின் இருவருக்கு ஒரு சட்டம் மற்றோருக்கு பிரிதொரு சட்டமா என வினவினார்.