கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிக்க முடியுமா என்ற சிக்கல் எழுந்துள்ள நிலையில், வாகனங்கள் பயணிக்கலாம் ஆனால், எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், வாகனங்கள் குறித்த பகுதியூடாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.