நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறித்து சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விவாதத்தை நடத்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கவால் இது தொடர்பான யோசனை இன்று (21) முன்வைக்கப்பட்டுள்ளது.