ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்டத்தில் செயற்படும் ஏற்றுமதி நடவடிக்கை மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகளை நடத்துபவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தடையாக அமையாதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் தொழிலுக்குச் செல்வதற்கும் வீடுகளுக்குச் செல்லவும் தாம் தொழில்புரியும் நிறுவனங்களின் அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.