web log free
May 01, 2026

கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு

மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd