விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், இன்று (22) சபைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.
அவர், தனக்குரிய ஆசனத்தில் அமரமுடியாது.
அவருக்கென தனியான ஆசனம் ஒதுக்கப்படும். ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சபையைத் தவிர, பாராளுமன்றக் கட்டிடத்தில் வேறெங்கும் அவர் செல்லமுடியாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.