இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குவது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயத்தின்போது வலியுறுத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம், ஏற்கனவே பல தடவை இந்த கோரிக்கையை பல தடவைகள் அமெரிக்காவிடம் முன்வைத்திருப்பதாகவும், இம்முறையும் முன்வைக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் மீதும் போர்க் குற்றச்சாட்டுக்களினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை விதிக்கபட்டிருப்பது குறித்து சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை நேருக்குநேர் சந்திக்கும்போது இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ சபையில் கோரிக்கை முன்வைத்தார்.
ஏனென்றால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இராணுவத் தளபதி பதவிக்காக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயரை தாமே பல தடவைகள் முன்மொழிந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.