ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரை இடைநிறுத்த சஜித் பிரேமதாஸ அறிவுறுத்தியுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் நேற்று (22) கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு, ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரும், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்தவரும், ரிஷாட்டும் ஹக்கீமும் இணைந்து உருவாக்கிய கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.