கொஸ்கமவில் தப்பிய கொரோனா தொற்றாளர், பொரளை சஹஸ்ரபுரவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில், 13ஆம் மாடியில் சிக்கிக்கொண்டார்.
கொஸ்கம பகுதியிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான அந்த நபர், வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.