web log free
January 09, 2025

கொரோனா விவரமும் மூடப்பட்ட சந்தைகளும்

 

தியத்தலாவையில் இருவருக்கு கொரோனா

தியத்தலாவையிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களைக் கண்டறிந்து பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நுகேகொட மரக்கறி சந்தைக்கு பூட்டு

இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து நுகேகொட மரக்கறி சந்தை தொகுதி மூடப்பட்டது

 

பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பண்டாரவளை ஞாயிறு சந்தையை நடத்துவது மறுஅறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பண்டாரவளை நகரசபை தலைவர் ஜனக்க நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில், பண்டாரவளையிலுள்ள கிராமங்கள், தோட்டங்களுக்கு அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார். 

வெல்லவாய, வெலிமடை, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவான விவசாயிகள், பண்டாரவளை ஞாயிறு சந்தைக்கு மரக்கறிகளைக் கொண்டுவந்து விற்பனை செய்வதாகவும் அத்துடன், நுகர்வோர் உட்பட பெரும்ளவானோர் இந்தச் சந்தையால் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்த அவர், அவர்களது சுகாதார பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மறுஅறிவித்தல் வரை ஞாயிறு சந்தையை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

நீர்கொழும்பில் கொரோனா 31 ஆக அதிகரிப்பு

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட  நீர்கொழும்பைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர்கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

“குடாபாடு கனத்த வீதி மற்றும் லூவிஸ் பிளேஸ் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என  நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நு​கேகொட மரக்கறி சந்தைக்கு பூட்டு

இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து நு​கேகொட மரக்கறி சந்தை தொகுதி மூடப்பட்டது.

கல்முனையில் 9 பேருக்கு கொரோனா

கல்முனை பகுதியில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை   பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவில் உறுதியாகியுள்ளது.

அம்பாறை பகுதியில் பேலியகொட மீன் சந்தைக்கு வந்துசென்றவர்களுக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

 பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில், நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் விபரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நேற்று (23) அதிகரித்திருந்தது. சுமார் 866 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd