மட்டக்களப்பு மாவட்டத்தில்,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேண்டி பள்ளிவாசல்களை மூடி வைக்க பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அந்தவகையில், வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் தற்காலிகமாக யாரும் பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு வருகைதராமல் தங்களுடைய தொழுகைகளை வீடுகளில் நிறைவேற்றிக் கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
மை குறிப்பிடத்தக்கது.
இன்று (24) ஆம் திகதியன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 11 பேர், மட்டக்களப்பில் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.