வயிறு வலியால் அவதிப்படுவந்த 21 வயது இளம் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து மிகப்பெரிய கட்டி ஒன்று அகற்றப்பட்டுள்ள சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் 21 வயதாகும் மேடலின் ஜோன்ஸ். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது.
மலசிக்கல் அல்லது மாதவிடாயின் போது வரும் வலியாக இருக்கலாம் என நினைத்து மேடலின் அந்த வலியை சாதாரணமாக விட்டுவிட்டார்.
மேலும் வயிறு வலி வரும் போது சில மாத்திரைகளை உட்கொண்டு நாட்களை கடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் மேடலின் வயிறு வீங்கி வலி மிகவும் அதிகமானநிலையில் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கர்ப்பப்பையில் மிகப்பெரிய இரத்த கட்டி ஒன்று வெடிக்கும் தருவாயில் இருந்துள்ளது.
உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது கருப்பையில் இருந்த இரத்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.