மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள கடிதத்தில் எதிர்கட்சியின் 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் ஐவர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இளைஞர் ஒருவர் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தான் அரசியல்வாதி என்பதை மனித உரிமை செயற்பாட்டாளரென” தெரிவித்துள்ளார்.
அத்துடன், துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தெரிவித்து, அரசாங்கத்தின் 50 உறுப்பினர்களுக்கு அதிகமானோரின் கையொப்பத்துடனான கடிதம் எதிர்வரும் நாள்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.