தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில், காட் விளையாட்டு, குழுவாக விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கம்பஹா மாட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, முல்லேரியாவ மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் வீதிகளில், ஒழுங்கைகளில் மற்றும் அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடமுடியாது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில், அக்கம் பக்கத்தினருடன் விளையாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.