கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துவருவதால், ஹட்டன் பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் நால்வர் குடும்ப அங்கத்தவர்கள். ஏனைய அறுவரும் நெருங்கிய பழகியவர்கள்.
நகரத்தில் கிருமி தொற்று தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படும். அத்துடன், ஹட்டன் நகரும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.