ஒரு முகக் கவசத்தை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்பதுடன், பின்னர் புதிய முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் என, சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
“ நீங்கள் தொழிலுக்குச் செல்பவராயின், அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக வெளியே செல்வீர்களாயின் நீங்கள் அணியும் முகக் கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும். பின்னர் புதிய முகக் கவசத்தையே அணிய வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகக் கவசங்களை ஆங்காங்கே வீசுவதாலும் கொரோனா தொற்று பரவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முகக் கவசங்களை அணியும் போது,மூக்கு, வாய் என்பவற்றை நன்றாக மூடும் வகையில் அணிய வேண்டும்.
வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக் கவசங்களை கொண்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்