அமெரிக்க இராஜாங்க செயலாளரின் விஜயத்தின் ஊடாக இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தாத அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயத்தையொட்டி சீன தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கொவிட் 19 தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தருணத்திலேயே அமெரிக்க ராஜாங்க செயலாளரின் பயணம் அமைந்துள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டும் உயிரிழந்தும் உள்ள நேரத்தில், பொம்பியோவின் விஜயத்துக்கு முன்னர் பெருமளவான அரச பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவது சுகாதார நடைமுறைகளை மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளது.