சீனாவிடமிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட மைக்பொம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பெர்க்குடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
எங்கள் இரு ஜனநாயக நாடுகளும் தமது மக்களையும் சுதந்திர உலகத்தினையும் பாதுகாப்பதற்கு இணைய வேண்டும். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நம்மைப் போன்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் நெருக்கமாக வளர இன்று ஒரு புதிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. நிச்சயமாக இன்னும் பல நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இன்று நாம் விவாதிக்க நிறைய உள்ளன, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் துணை நிற்கும் என மைக்பொம்பியோ கூறினார்.