இலங்கைக்கு வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று (28) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு இலங்கைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் வந்தடைந்துள்ளனர்.
இரண்டு நாள் விஜயமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.