ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன், சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பிசிஆர் பரிசோதனை இயந்திரம் மே மாதம் முல்லேரியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட நிலையில், கடந்த 6 நாள்களாக இது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிஆர் பரிசோதனை இயந்திரம் செயழிலந்துள்ளதால், பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிசிஆர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தல் உள்ளிட்ட தொற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளை செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.