மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடுத்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த நிலைமை இருக்கின்றது. இன்று முதல் வரும் 3 தினங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்பதால் மக்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.