ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டவர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாக அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியதை அடுத்து திரள் திரளாக மேல் மாகாணத்திலிருந்து குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பலரும் சென்றுள்ளனர்.
வெளிமாவட்டங்களிலிருந்து தொழிலுக்காக வந்து கொழும்பில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் பாரிய வாகன நெரிசல் நேற்று ஏற்பட்டது. இவ்வாறு மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.