குறைந்தது இரண்டு வாரத்திற்காவது முழு நாட்டையும் முடக்காவிட்டால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சித் தலைமையகமாகிய சிறிகொத்தவில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் பேசிய அவர், தினமும் பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்திய போதிலும், நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் சுகாதார அமைச்சினால் நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் தற்பேர்து நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது. கோவிட்-19 வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.