கொரோனா வைரஸ் தொற்று மிகவீரியமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.
- களுபோவில வைத்தியசாலையில் 2 வைத்தியர்கள், தாதிக்கு தொற்று உறுதியானது.
- முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்த, மருதானை, கிரான்ட்பாஸ் ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 10 பொலிஸாருக்கு கொரோனா.
- கொழும்பு குற்றப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸாரில் 235 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்தே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.