web log free
January 09, 2025

காட்டுக்குள் களேபரம்: ஒருவர் காயம்


விலங்குகளை வேட்டையாட வந்த தரப்பினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சப்பவம் நேற்று (01) இரவு கதிர்காமம் - கட்டகமுவ பகுதிக்கு அருகில் காட்டுப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் அங்கு சென்ற வன ஜீவராசி அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வேட்டையாடுபவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd