அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டவர்களில் 30 ஆயிரம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, 700 பேர் வரை இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல் மட்டுமே, அதில் இருந்து தப்புவதற்கான தற்போதைய ஒரே தீர்வாக உள்ளது.
ஆனால், இத்தகைய நெருக்கடியான சூழலில் அமெரிக்க தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் உற்சாகத்தில் நோய்த் தொற்று அபாயத்தை மறந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர்.
இதன் பின்விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது.
இதற்காக, கடந்த ஜூன் 20ம் திகதி முதல் செப்டம்பர் 22ம் திகதி வரையிலான காலக் கட்டத்தில் டிரம்ப் நடத்திய 18 பிரசார பேரணிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.