web log free
January 10, 2025

மருமகள் தாக்கியதில் மாமியார் உயிரிழப்பு

குடும்ப சண்டை காரணமாக, மருமகளால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின்போது தாக்குதலுக்கு இலக்கான மாமனார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் இச்சம்பவம், நேற்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாரிமுத்து கோவிந்தம்மா (வயது  80) என்ற 4 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார் என்றும் இவரது கணவர் அங்கமுத்து மாரிமுத்து (வயது 85 ), வைத்தியசாலையில்  சிகிச்சைப்பெற்று  வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மூன்று பிள்ளைகளின் தாயான மருமகள், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd