ஹப்புத்தளை – கொஸ்லாந்தை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான குழந்தை உட்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய், தந்தை, மற்றும் பாட்டி ஆகியோருக்கு இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் கம்பஹாவில் இருந்து அண்மையில் கொஸ்லாந்தை பகுதிக்கு சென்றுள்ளனர்.
குழந்தையின் தாத்தாவிற்கு கொழும்பில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர் என பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.