web log free
January 10, 2025

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையில்

அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தமாக 119 எலக்டோரல் வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார். டொனால்ட டிரம்ப் 91 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு நேரமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை மாறுபடுகிறது.

உள்ளூர் நேரப்படி வாக்குப் பதிவு நிறைவடைந்த இண்டியானா, கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இண்டியானாவில் 11 எலக்டோரல் வாக்குகளை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கென்டகியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது. டெக்சாஸ், நியூ ஹாம்ஷ்பையரில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
 
கடந்த தேர்தலிலும் தெற்கு கரோலினாவில் டிரம்ப் எளிதாக வெற்றிபெற்றார். அங்கு டிரம்ப் 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வென்றுள்ளார்.
 
ஜார்ஜியாவில் 4 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். மேற்கு விர்ஜினியாவில் டொனால்ட் டிரம்ப் 5 எலக்டோரல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
 
அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு  இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. 70%க்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதால் முடிவுகளை முழுமையாக அறிவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிறார்கள்
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd