web log free
May 15, 2025

வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிறைவு பெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதியை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாக முடியும்.

இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் மாநிலங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

அதே நேரம் வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய இடங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

மிச்சிகனில் ஜோ பிடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.6 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மிச்சிகன் மாநிலத்தில் 16 இடங்களை கைப்பற்றியதன் மூலம் 264 இடங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்.

இன்னும் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. இருப்பினும் ஜோ பிடன் வெற்றியின் விளிம்பில் உள்ளதாக அவரது பிரசாரக்குழு தெரிவிக்கிறது.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் மோசடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் பிரசாரக் குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd