- பொலிஸ் அதிகாரிகள் 85 பேருக்கு கொரோனா தொற்று, நேற்று (5) உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் பரவுவதைத் தடுக்கும் தேசிய மய்யம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை 358 பொலிஸார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மேற்படி மய்யம் தெரிவித்துள்ளது.
- தலாத்துஓயா நகரை அண்மித்தப் பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவருவதால், பொதுசுகாதார பரிசோதகர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வர்த்தக நிலையங்களை, நாளை (7) முதல் மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு, நகரின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.ஓட்டோ ஓட்டுநர் சங்கம், தனியார் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் இணக்கத்துடனேயே, நகரை மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, மேற்படிச் சங்கத்தின் தலைவர் சுசில் வேதகே தெரிவித்தார்
- மேல் மாகாணத்தில் இன்று (6) வரை 199 பொலிஸ் அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் 258 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1,350 பேர் சுயத்தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 26 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
- கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவியமைத் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தர்.
- பொரளை சீமாட்டி (லேடி ரிஜ்வே) சிறுவர் வைத்தியசாலையில், இதுவரை 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார். 20 குழந்தைகளும் 12 தாய்மார்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
- வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
- ராகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது.
- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 563 பேர் இன்று (06) குணமடைந்துள்ளனர்.
- இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7186ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 5355 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.