web log free
January 10, 2025

90 நாட்களில் 3 ஆண்களுடன் திருமணம்

மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் மகாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கும் ஊரடங்கால் வருமானத்திற்கு வழி இல்லாமல் போயுள்ளது.

அவரது கணவரும் வேலை இல்லாமல் இருந்துள்ளார். அதனால் அவர் பணத்திற்காக, கடந்த மூன்று மாதங்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர்.

திருமணம் ஆன 15 நாட்களுக்குள் அவர்களிடம் இருந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிச் செல்வதுதான் அந்தப் பெண்ணின் வழக்கம். இதேபோல் மூன்று ஆண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதில் ஒரு நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

மனைவியை காணவில்லை என தேடிய போதுதான், அவர் இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக புகாரளித்துள்ளார். 

பணத்திற்காக அவர்களை ஏமாற்றியதாக அந்தப் பெண் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மற்ற இருவரும் அவர் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd