web log free
May 23, 2026

நல்லிணக்க ஆணைக்குழு யோசனை ஒத்திவைப்பு


உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில், சமர்ப்பிக்கப்பட்ட யோசனை, அமைச்சரவையினால் நேற்று (26) இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (26) கூடியது. இதன்போது, மேற்படி யோசனை தொடர்பிலான அவதானிப்புகளை முன்வைப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு மீண்டும் காலஅவகாசம் கேட்டது.

இதனால், அந்த யோசனை தொடர்பில் நேற்றையதினம் கலந்துரையாடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd