web log free
January 10, 2025

ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் - சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்

மேல் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மட்டக்குளி , மோதரை , வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை , புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை , தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் ஆகிய 12 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

அத்துடன், கொழும்பின் சில தொடர்மாடி குடியிறுப்புகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, மோதரையின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன , தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே வரவோ அனுமதியில்லை


© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd